எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச்செயலாளராக ஆவார்


எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச்செயலாளராக ஆவார்
x

எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச்செயலாளராக ஆவார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை

எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச்செயலாளராக ஆவார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

இனிப்பு

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஐகோர்ட்டு தீர்ப்பு வெளிவந்ததை தொடர்ந்து மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பாக தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன. கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வின் வெற்றி சரித்திரத்தில் மற்றொரு மகுடமாக, நீதி அரசர்கள் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். இந்த தீர்ப்பு அ.தி.மு.க. தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா சென்று இருக்கிறார். அங்கு அவர் கேரள முதல்வரை சந்தித்து முல்லை பெரியாறு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இப்போதே தி.மு.க. ஆட்சி மீது மக்கள் வெறுப்படைந்து உள்ளனர். தேர்தலின் போது அளித்த முக்கிய வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை. மக்களிடம் அவப்பெயரை சம்பாதித்து உள்ளது.

சிறப்பு நிதி

இடைக்கால பொது செயலாளராக இருக்கும் எடப்பாடி இனி நிரந்தர பொது செயலாளராக வர போகிறார். அவர் தான் அடுத்த முதல்-அமைச்சர். எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் ஆதரவு உள்ளது. தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிப்படி தமிழகத்தில் 48 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்து இருக்க வேண்டும். ஆனால் வெறும் 13 லட்சம் பேருக்கு தான் தள்ளுபடி செய்து இருக்கிறார்கள்.

பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தேர்தலின் போது தி.மு.க. கூறியது. இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றால் தமிழகத்தில் 2 கோடியே 15 லட்சம் பெண்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்க வேண்டும்.

முதியோர் உதவித்தொகையை உயர்த்துவதாக கூறினார்கள். ஆனால் கியாஸ் மானியம் பெறுபவர்களுக்கு உதவி தொகையை நிறுத்தி வருகிறார்கள். தற்போது திருச்சி மாநகராட்சிக்கு சிறப்பு நிதி ஒதுக்கி இருக்கிறார்கள். அதே போல் மதுரை மாநகராட்சிக்கு சிறப்பு நிதி பெற நிதி அமைச்சர் தனது செல்வாக்கினை பயன்படுத்த வேண்டும். மழை காலம் வருவதற்கு முன்பே சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று நான் சேவல் போல் கூவி கொண்டு இருந்தேன். ஆனால் இந்த அரசும், மாநகராட்சியும் விழித்து கொள்ளவில்லை. தற்போது மக்கள் அவதிப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story