புதிய வாகனத்திற்கு மாறிய எடப்பாடி பழனிசாமி: என்ன காரணம்?


புதிய வாகனத்திற்கு மாறிய எடப்பாடி பழனிசாமி:  என்ன காரணம்?
x
தினத்தந்தி 2 July 2023 8:49 AM IST (Updated: 2 July 2023 10:58 AM IST)
t-max-icont-min-icon

அர்பேனியா வகை வாகனத்தை தற்போது எடப்பாடி பழனிச்சாமி பயன்படுத்த தொடங்கியுள்ளார்.

சென்னை,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாங்கியுள்ள புதிய வாகனம் கவனத்தை ஈர்த்து வருகிறது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் பிரச்சாரத்திற்காக பிரத்தியேகமான புதிய வகை வாகனம் ஒன்று வாங்கியுள்ளார். இந்தியாவின் போர்ஸ் நிறுவனத்தின் அர்பேனியா வகை வாகனத்தை தற்போது எடப்பாடி பழனிச்சாமி பயன்படுத்த தொடங்கியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, அவருக்கு காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால், அதற்கு வசதியாக இந்த புதிய வாகனம் வாங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதற்கு தயாராகும் வகையில் புதிய வாகனத்தை வாங்கியுள்ளதாக அதிமுகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில்முதல் முறையாக இந்த வகை வாகனங்களில் ஓட்டுனர் மற்றும் ஓட்டுனருக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்பவருக்கும் ஏர்பேக் வசதியை கொண்டுள்ளது. மேலும் இருக்கையில் அமர் பவர்களுக்கு பிரத்தியேகமாக ஏசி வெண்டிலென்ட் அமைக்கப்பட்டுள்ளது.


Next Story