"ஆவின் பொருட்களின் விலையை குறைக்க வேண்டும்" - தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
ஆவின் பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
ஆவின் பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக அரசு பதவியேற்ற 28 மாதத்திற்குள் பால் மற்றும் பால் பொருட்களின் விலையை 8 முறை உயர்த்தியிருப்பதாகவும் , தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் நெய் மற்றும் வெண்ணெய்யின் விலையை பல மடங்கு உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்றும் இதை காரணமாக வைத்து தனியார் நிறுவனங்களும் பால் பொருட்களின் விலையை தங்கள் இஷ்டத்திற்கு உயர்த்தும் என்றும் தெரிவித்துள்ளார் .
பால் கொள்முதலில் இருந்து விற்பனை வரை எல்லாவற்றிலும் சரிவை சந்தித்து வரும் ஆவின் நிறுவனம், மறைமுகமாக தனியார் நிறுவனங்களுக்கு துணை போகிறதோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் , ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விலையேற்றத்தை ரத்துசெய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.