டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு
டெல்லி சென்ற அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை,
தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது. எனவே அவருக்கு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பிரிவு உபசார விழா நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.
இந்த விழாவில் பங்கேற்க அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று டெல்லி சென்றார். ராம்நாத் கோவிந்த் பிரிவு உபசார விழாவில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி, புதிய ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவியேற்பு விழாவிலும் கலந்துகொள்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்தநிலையில், டெல்லி சென்ற அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story