எடப்பாடி பழனிசாமி கையில் சிக்கிய அதிமுக அழிவு பாதையை நோக்கி செல்கிறது- டிடிவி தினகரன்


எடப்பாடி பழனிசாமி கையில் சிக்கிய அதிமுக அழிவு பாதையை நோக்கி செல்கிறது- டிடிவி தினகரன்
x

நீதிமன்ற தீர்ப்பில் எடப்பாடிக்கு சாதகமாக இரட்டை இலையும் அ.தி.மு.க.வும் வந்தால் அது அ.தி.மு.க.வை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.

திருமங்கலம்,

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீதிமன்ற தீர்ப்பில் எடப்பாடிக்கு சாதகமாக இரட்டை இலையும் அ.தி.மு.க.வும் வந்தால் அது அ.தி.மு.க.வை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும். ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி கையில் சிக்கிய அ.தி.மு.க. கட்சி அழிவு பாதையை நோக்கி செல்கிறது. எம்.ஜி.ஆர். கையில் இருந்த இரட்டை இலை சின்னம் சினிமா வில்லன்கள் நம்பியார், வீரப்பா கையில் கிடைத்தால் எப்படி இருக்குமோ அதுபோல் எடப்பாடி பழனிசாமி கையில் உள்ளது என்று மக்கள் நினைக்கத் தொடங்கி விட்டார்கள். இரட்டை இலை சின்னம், அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமிக்கு தான் சொந்தம் என்று வந்தால் அது இரட்டை இலைக்கும், அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் பிடித்த கெட்ட நேரம். கட்சியில் துரோகம் இழைத்ததால் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கினார்.

ஆனால் துரோகத்தின் மூலமாகவே பொறுப்புக்கு வந்த ஒருவரை இயற்கையும் அனுமதிக்காது. அவரை நிச்சயம் மக்கள் புறக்கணிப்பார்கள். தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்றால் அ.தி.மு.க. தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அம்மாவின் உண்மை தொண்டர்கள் இணைந்தால் தி.மு.க.வை நிச்சயமாக வீழ்த்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story