படித்த வேலையில்லா இளைஞர்கள் மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்
படித்த வேலையில்லா இளைஞர்கள் மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழக அரசு வேலையில்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு பரிந்துரை செய்யப்படும் கடன் தொகை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று அதிகபட்ச மானிய தொகை ரூ.1¼ லட்சத்திலிருந்து ரூ.3¾ லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் படித்த வேலையில்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டம் மற்றும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் ஆகியவற்றுக்கு வயது வரம்பு பொது பிரிவினருக்கு 18 முதல் 45 வயது ஆகவும், சிறப்பு பிரிவினருக்கு 18 முதல் 55 வயது ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்கி பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம். அரியலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்கி பயன்பெற வாலாஜா நகரத்தில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 8925533925, 8925533926 என்ற செல்போன் எண்களிலோ தொடர்பு கொள்ளலாம், என கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.