செல்லப்பம்பட்டியில் இல்லம் தேடி கல்வி திட்ட பயிற்சி வகுப்பு

செல்லப்பம்பட்டியில்  இல்லம் தேடி கல்வி திட்ட பயிற்சி வகுப்பு
x

செல்லப்பம்பட்டியில் இல்லம் தேடி கல்வி திட்ட பயிற்சி வகுப்பு

நாமக்கல்

நாமக்கல் அருகே உள்ள செல்லப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து தன்னார்வலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது. பயிற்சியை பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜன் தொடங்கி வைத்தார். வட்டார ஆசிரியர் பயிற்றுனர் செல்வராணி முன்னிலை வகித்தார். கருத்தாளர்கள் கண்ணன், செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். இதில் எண்ணும் எழுத்தும், இல்லம்தேடி கல்வி திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்கள் இடைநிற்றல் தவிர்க்கப்படுவதோடு, எழுதப்படிக்க தெரியாதவர்கள் இல்லாத நிலை உருவாகும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Next Story