கல்வி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
பீஞ்சமந்தையில் கல்வி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
அணைக்கட்டு ஒன்றியம், பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட குண்டுராணி அரசு தொடக்கப்பள்ளியில் கல்வி விழிப்புணர்வு நாளை முன்னிட்டு மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் குமரன் தலைமை தாங்கினார். ஜார்த்தான் கொல்லை ஊராட்சி மன்ற தலைவர் ரேகா ஆனந்தன், பீஞ்சமந்தை ஊராட்சி மன்ற தலைவர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். குண்டு ராணி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் வரவேற்று பேசினார்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி மற்றும் மகேஸ்வரி, கங்கா கவுரி, சாந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டு கல்வி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் மலைப்பகுதியில் பயிலும் சுமார் 200 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தொடக்கப்பள்ளியில் இருந்து தொடங்கி பீஞ்சமந்தை அரசு உயர்நிலைப்பள்ளி வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் ஓடினர்.