Normal
குஜராத்தில் கல்வி மாநாடு - தமிழகம் புறக்கணிப்பு
குஜராத்தில் கல்வி மந்திாிகள் மாநாடு நடைபெற்று வருகிறது. அதனை தமிழக அமைச்சா்கள் புறக்கணித்து உள்ளனா்.
சென்னை,
தேசிய கல்வி மாநாடு குஜராத் மாநிலத்தில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. மத்திய கல்வி மந்திாி தா்மேந்திர பிரதான் தலைமையில் மாநாட்டில் புதிய கல்விக் கொள்கை குறித்தும் அதனை அமல்படுத்து குறித்தும் விவாதிக்கப்படுகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு மாநில கல்வி மந்திாிகள் பங்கேற்று உள்ளனா்.
இந்த நிலையில், கல்வி மாநாட்டை தமிழக அரசு புறக்கணித்து உள்ளது. இந்த மாநாட்டில் பள்ளிக்கல்வி துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயா்கல்வி துறை அமைச்சா் பொன்முடி மற்றும் துறை சாா்ந்த அதிகாாிகள் என யாரும் பங்கேற்க வில்லை.
Related Tags :
Next Story