வீடு வீடாக சென்று குழந்தைகளை பள்ளியில் சேர்க்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை


வீடு  வீடாக சென்று குழந்தைகளை பள்ளியில் சேர்க்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை
x

ஜெகதாபி ஊராட்சியில் வீடு வீடாக சென்று குழந்தைகளை பள்ளியில் சேர்க்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

கரூர்

அதிகாரிகள் நேரில் வந்தனர்

கரூர் மாவட்டம், ஜெகதாபி ஊராட்சியில் உள்ள பொம்மணத்துப்பட்டி, அய்யம்பாளையம், பொரணி, அல்லாளி கவுண்டனூர் மற்றும் சுற்றுப்பகுதி குக்கிராமங்களில் பள்ளி செல்லா குழந்தைகள் பலர் உள்ளனர். அவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி நேற்று அய்யம்பாளையத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் உள்ள வீடுகளை கண்டறிந்து அங்கு நேரடியாக சென்ற தாந்தோன்றி வட்டார கல்வி அலுவலர்கள் சகுந்தலா, கவுரி, வட்டார வள மைய மேற்பார்வையாளர் செல்வகுமார், அய்யம்பாளையம் அரசு பள்ளி தலைமை ஆசிரியை ராஜகுமாரி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் பள்ளி செல்வதற்கு இடையூறாக உள்ள காரணங்கள் என்னவென்று கேட்டறிந்தனர்.

பெற்றோர் சம்மதம்

பின்னர் பள்ளி செல்லும் வயதில் உள்ள குழந்தைகள் அனைவரும் கண்டிப்பாக பள்ளிக்கு செல்ல வேண்டும். அரசு பள்ளிகளில் தற்போது குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி முதல் அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகிறது.

குழந்தைகளுக்கு கல்வி அறிவு எவ்வளவு முக்கியம் என்பதை பெற்றோர்கள் உணர்ந்து குழந்தைகள் பள்ளி செல்லாமல் வீட்டில் இருப்பதையோ வேலைக்கு செல்வதையோ அனுமதிக்க கூடாது என்றும் கூறினார். இதனையடுத்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்தனர்.


Next Story