காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் ஊரீசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா
காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் ஊரீசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா நடந்தது.
காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் ஊரீசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் எபினேசர் தலைமை தாங்கினார். ஆசிரியர் பாஸ்கரன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக ஊரீசு கல்லூரி முன்னாள் முதல்வர் ஸ்டேன்லி ஜோன்ஸ் கருணாகரன் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் பள்ளி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சிகள், நாடகம் மற்றும் சிலம்பம், பாட்டு போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்கனவே நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்கள் சார்பில் 8-ம் வகுப்பு மாணவன் கார்த்திகேயன் காமராஜர் வரலாறு குறித்து பேசினார். அதைத்தொடர்ந்து மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளை பாதுகாப்பது குறித்த உறுதிமொழியை அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் ஏற்றனர்.
விழாவில் ஜீலியட் சம்பூரணம், சாமுவேல் இன்பநாதன், சத்திய ஜீவகுமாரி மற்றும் பிரான்சிஸ் ஞானகுமார், சத்யஜீவகுமாரி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. முடிவில் தமிழ் ஆசிரியை நவமி பரஞ்ஜோதி நன்றி கூறினார்.
நிகழ்ச்சியை வத்சலா ஜாய்ஸ் பத்மினி தொகுத்து வழங்கினார்.-------------3 காலம்