திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சிறப்பு கல்விக்கடன் முகாமில் 120 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சிறப்பு கல்விக்கடன் முகாமில் 120 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
திருப்பூர்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சிறப்பு கல்விக்கடன் முகாமில் 120 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
சிறப்பு கல்விக்கடன் முகாம்
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்க வசதியாக சிறப்பு கல்விக்கடன் முகாம் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. முகாமுக்கு முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார்.
மாவட்ட முன்னோடி வங்கியான கனரா வங்கி உள்பட 22 வங்கி கிளை அதிகாரிகள் முகாமில் பங்கேற்றனர். மாணவ-மாணவிகள் விண்ணப்ப நகல், மாணவ-மாணவிகள், பெற்றோர் புகைப்படம், வங்கி கணக்கு புத்தக நகல், ஆண்டு வருமான சான்று நகல், சாதிச்சான்று நகல், பான்கார்டு நகல், ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், கல்விக்கட்டண விவரம், 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மற்றும் இளநிலைபட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ், கலந்தாய்வு மூலமாக பெறப்பட்ட சேர்க்கைக்கான ஆணை உள்ளிட்ட ஆவணங்களுடன் பங்கேற்றனர்.
தனித்தனியாக வங்கி அதிகாரிகள் அமர்ந்து கல்விக்கடன் பெறுவதற்கான விவரங்களை மாணவர்களுக்கு அளித்தனர். முகாமில் 120 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இவர்களுக்கு ரூ.3½ கோடி முதல் ரூ.4 கோடி வரை கல்விக்கடன் பெறுவதற்கான உத்தரவாதத்தை 17 வங்கி கிளை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று (வியாழக்கிழமை) 2-வது நாளாக சிறப்பு கல்விக்கடன் முகாம் நடக்கிறது. இந்த முகாமில் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி கருணாகரன், கலெக்டர் வினீத் ஆகியோர் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு கல்விக்கடன் பெறுவதற்கான உத்தரவை வழங்க உள்ளனர்.
தாட்கோ திட்ட கடன்
பின்னர் மாலையில் தாட்கோ திட்டத்தில் தொழில் தொடங்குவதற்காக விண்ணப்பித்து வங்கிகளில் இதுவரை நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்து அறிய, தாட்கோ கடன் பெற விண்ணப்பித்தவர்கள், சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு தொழில்கடன் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது.