மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


மாணவ, மாணவிகள் கல்வி  உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 30 Nov 2022 12:15 AM IST (Updated: 30 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கல்வி உதவித்தொகை

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி. மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ- மாணவிகளுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கலாம்

இந்த கல்வி உதவித்தொகைக்கு 2022-23ம் கல்வியாண்டில் புதியது (Fresh Application) விண்ணப்பிக்க விரும்பும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த தகுதியான மாணவர்கள் கீழ்கண்ட முகவரியிலுள்ள இயக்ககத்தையோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலுள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகலாம். அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholar shipschemes என்ற இணையதள முகவரியிலிருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும் 2022-23-ம் நிதி ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை பரிந்துரை செய்து ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டிடம், 2-வது தளம், சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரிக்கு பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வருகிற 31.1.2023-க்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044-29515942 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது மின்னஞ்சல் முகவரி tngovtiitscholarship@gmail.com தொடர்புகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story