மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி பேரணி


மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி பேரணி
x
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.

நீலகிரி

ஊட்டி,

ஆண்டுதோறும் டிசம்பர் 3-ந் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி கடந்த 14-ந் தேதி முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஊட்டி வட்டார வள மையம் சார்பில், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி குறித்த விழிப்புணர்வு பேரணி ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. பேரணியை மாவட்ட கல்வி அலுவலர் ஜெயக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஊட்டி அரசு பள்ளி மாணவர்கள் 90 பேர் பதாகைகளை ஏந்தியவாறு மார்க்கெட் வழியாக ஏ.டி.சி. வரை சென்று அங்கிருந்து மீண்டும் பள்ளிக்கு பேரணியாக வந்தனர். இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஷீலா மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

இதேபோல் மஞ்சூர் அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட பேரணியை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட உதவி அலுவலர் குமார் தொடங்கி வைத்தார்.


Next Story