அரசு பள்ளி மாணவிக்கு கல்வி உபகரணம்
அ.தி.மு.க. சார்பில் அரசு பள்ளி மாணவிக்கு கல்வி உபகரணம் வழங்கப்பட்டது.
வள்ளியூர்:
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்-அமைச்சராக இருந்தபோது அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ கனவை நனவாக்கும் விதமாக 7.5 சதவீத மருத்துவ உள்ஒதுக்கீடு ஆணை அறிவித்தார். இதன் மூலம் மருத்துவம் பயில இடம் கிடைத்ததையொட்டி தான் பயின்ற செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவி வினிதாவிற்கு நெல்லை மாவட்ட அ.தி.மு.க. பொருளாளரும், முன்னாள் எம்.பி.யுமான சவுந்தரராஜன் தனது சொந்த செலவில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள ஐபேடு வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை சாந்தினி பொன்குமாரி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் லிங்கதுரை, செட்டிகுளம் ஊராட்சி கழக செயலாளர் பொன்ராஜ், இருக்கன்துறை ஊராட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் குமரேசன், ராதாபுரம் ஒன்றிய பொருளாளர் துரைச்சாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் சுரேஷ்குமார், மாணவியின் பெற்றோர் பழனி முருகன், பிரேமா உள்பட பலர் கலந்துகொண்டனர்.