பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்


பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள்
x

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நகர மன்ற தலைவருமான புகழேந்தி தலைமை தாங்கி நகராட்சி பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். இதில் வேதாரண்யம், நாகை ரஸ்தா பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி, மணியன் தீவு அங்கன்வாடி, அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, அகஸ்தியன்பள்ளிகாந்தி உதவி தொடக்கப்பள்ளி, பயத்தவரன்காடு, சுப்பையா உதவி நடுநிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வேம்பதேவன்காடு பள்ளி உள்ளிட்ட பள்ளிகளை சேர்ந்த 500 மாணவ-மாணவிகளுக்கு எழுதுபொருட்கள், நோட்டு புத்தகம் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வேதாரண்யம் வர்த்தக சங்க தலைவர் தென்னரசு, நகரமன்ற துணை தலைவர் மங்களநாயகி, வக்கீல்கள் அன்பரசு, வெங்கடேஸ்வரன், மேற்கு ஒன்றிய இளைஞர் அணி துணைஅமைப்பாளர் விக்னேஷ் காமராஜ், இளைஞர் அணியை சேர்ந்ந சண்முகம், சுதாகர், நகரமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story