குடியநல்லூர் அரசு பள்ளியில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி


குடியநல்லூர் அரசு பள்ளியில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 1 April 2023 12:15 AM IST (Updated: 1 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குடியநல்லூர் அரசு பள்ளியில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

தியாகதுருகம் அருகே குடியநல்லூர் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு மனநலம் மற்றும் கல்வி குறித்த வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியதாஸ் தலைமை தாங்கினார்.

உதவி தலைமை ஆசிரியர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். பட்டதாரி ஆசிரியர் பாபு வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மனநல மருத்துவர் வேல் இசைக்கோ கலந்து கொண்டு மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் படிக்க வேண்டும். அவ்வாறு படித்ததை மீண்டும் நினைவுபடுத்தி பார்க்க வேண்டும். மேலும் படிப்பு சம்பந்தமாக சக மாணவர்களுடன் கலந்துரையாட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.


Next Story