இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உருவ பொம்மை எரிப்பு
இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர்
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறித்து இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் அவதூறு பரப்பும் வகையில் பேசியதாகவும், இதனை கண்டித்து ஆம்பூர் பஸ் நிலையம் முன்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சந்திரன் தலைமை தாங்கினார்.
இதில் கலந்துகொண்டவர்கள் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அர்ஜுன் சம்பத்தின் உருவ பொம்மையை எரித்து கண்டனங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story