சாத்தூர் வைப்பாற்றில் கலக்கும் கழிவுநீர்
சாத்தூர் வைப்பாற்றில் கலக்கும் கழிவுநீரை தடுப்பதுடன், கருவேல மரங்களை அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூர்,
சாத்தூர் வைப்பாற்றில் கலக்கும் கழிவுநீரை தடுப்பதுடன், கருவேல மரங்களை அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்மழை
சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சாத்தூர், படந்தால், வல்லம்பட்டி, வெம்பக்கோட்டை ஆகிய பகுதிகளில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையினால் வைப்பாற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
இந்தநிலையில் கிராமங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீரானது அதிக அளவில் வைப்பாற்றில் கலக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயநிலை உள்ளது.
கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-
வைப்பாற்றின் கரையோர பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. வைப்பாற்றில் கழிவுநீர் கலந்து வருவதால் சுகாதாரமற்ற நிலை நிலவுகிறது. வைப்பாற்றில் கருவேல மரங்கள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இதனால் தண்ணீா் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. மேலும் நிலத்தடி நீர் மட்டமும் குறைய வாய்ப்பு உள்ளது.
எனவே வைப்பாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதுடன், ஆற்றில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.