நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு-460 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல்
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 450 காசுகளாக இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி முட்டை கொள்முதல் விலை 460 காசுகளாக உயர்ந்து உள்ளது. இதேபோல் ஏற்றுமதி ரக முட்டையின் கொள்முதல் விலை 450 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.முட்டைக்கோழி கிலோ ரூ.88-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதனால் முட்டைக்கோழி விலை கிலோ ரூ.86 ஆக குறைந்து உள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.106-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
Next Story