பாதுகாப்பு பணியில் இருந்த ஏட்டு திடீர் சாவு
ஆண்டாள் கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த ஏட்டு திடீரென இறந்தார்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர் மோகன் (வயது50). இவர் மல்லி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவர் ஆண்டாள் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை மற்ற போலீஸ்காரர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் ஒருவர் இறந்த சம்பவம் பக்தர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
Related Tags :
Next Story