பாதுகாப்பு பணியில் இருந்த ஏட்டு திடீர் சாவு
பாதுகாப்பு பணியில் இருந்த ஏட்டு திடீரென இறந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் ஜான் பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். ஜான் பாண்டியன் வருகையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் முழுவதும் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. தளவாய்புரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்த தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த விக்னேஷ் (வயது 32) என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை மற்ற போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டாக்ள், அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறினர். இந்த சம்பவம் சக ேபாலீசார் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.