தெப்பத்தில் வலம் வந்த ஏகாம்பரேஸ்வரர்-காமாட்சி அம்மன்
ஏகாம்பரேஸ்வரர்-காமாட்சி அம்மன் தெப்பத்தில் வலம் வந்தனர்.
திருச்சி
துறையூரை அடுத்த கரட்டாம்பட்டி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத 2-வது வார சோமவார நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி ஏகாம்பரேஸ்வரருக்கு பால், சந்தனம், தயிர், திருநீறு உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. அதன் பின்பு உற்சவமூர்த்தியான ஏகாம்பரேஸ்வரர் காமாட்சி அம்மனுடன் கோவில் பிரகாரத்தில் அமைந்துள்ள தெப்பக்குளத்தில் தெப்பத்தில் வலம் வந்தனர். இதில் காளிப்பட்டி கரட்டாம்பட்டி, துறையூர், புலிவலம் புத்தளம் பட்டி மண்பறை அபினி மங்கலம், சாத்தனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story