காவிரி பாலத்தில் முதியவர் பிணம்
காவிரி பாலத்தில் முதியவர் பிணமாக கிடந்தார்.
ஸ்ரீரங்கம்:
காவிரி ரெயில்வே பாலத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து திம்மராய சமுத்திரம் கிராம நிர்வாக அலுவலர் குமார், ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முதியவரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire