மின்சாரம் தாக்கி முதியவர் சாவு


மின்சாரம் தாக்கி முதியவர் சாவு
x

மின்சாரம் தாக்கி முதியவர் இறந்தாா்.

ஈரோடு

பவானி

சித்தோட்டை அடுத்த ஆட்டையம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 72). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று வீட்டில் மின்சார சுவிட்சை ஆன் செய்தபோது எதிர்பாராதவிதமாக முத்துசாமியை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் மயங்கி விழுந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து சித்ேதாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story