Normal
இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய முதியவர் கைது
சோழவந்தான் அருகே இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய முதியவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை
வாடிப்பட்டி,
சோழவந்தான் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ராசு (வயது 60). இவர் அந்த பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை ெகாடுத்து உள்ளார். வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். இந்த நிலையில் அந்த இளம்பெண்ணுக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டது. உடனே பெற்றோர், அந்த இளம்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்த போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். நடந்த சம்பவம் குறித்து கண்ணீர் மல்க அந்த இளம்பெண் பெற்றோரிடம் கூறினார்.
இதையடுத்து அவர்கள் சமயநல்லூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் உமா தேவி வழக்குப்பதிவு செய்து ராசுவை கைது செய்தனர்.
Related Tags :
Next Story