விஷம் குடித்து முதியவர் தற்கொலை
விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
அரிமளம் அருகே தாஞ்சூர் ஆதிதிராவிடர் காலனி பகுதியை சேர்ந்தவர் மெய்யப்பன் (வயது 68). விவசாய கூலி தொழிலாளி. இவர் தினமும் மது குடித்துவிட்டு கிராமத்தில் சுற்றி வந்துள்ளார். இதேபோல் சம்பவத்தன்று மெய்யப்பன் மது குடித்து விட்டு அப்பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தார். அப்போது மெய்யப்பனை அவரது மனைவி ஏன் இப்படி குடித்து விட்டு சுற்றுகின்றனர் என்று கண்டித்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனமுடைந்த மெய்யப்பன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவரை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மெய்யப்பன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அரிமளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.