விஷம் குடித்து முதியவர் தற்கொலை


விஷம் குடித்து முதியவர் தற்கொலை
x

விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை:

கந்தர்வகோட்டை அருகே நரியம் புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 64). இவர் கடந்த சில மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், விவசாயத்திற்கு வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்த புகாரின் பேரில், கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story