விஷம் குடித்து முதியவர் தற்கொலை


விஷம் குடித்து முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 15 April 2023 12:38 AM IST (Updated: 15 April 2023 3:05 PM IST)
t-max-icont-min-icon

விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள மேலமதனத்தூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாவாடை(வயது 83). இவர் தனது மகன் முருகன்(43) என்பவரது பராமரிப்பில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு ஏற்பட்ட தீராத வயிற்று வலி காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்து விட்டதாக முருகனின் மகன் கார்த்திக் என்பவரிடம் பாவாடை தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த முருகன் தனது தந்தை பாவாடையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து முருகன் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story