பஸ் மோதி முதியவர் சாவு
பஸ் மோதி முதியவர் சாவு
மேலூர்
மேலூர் அருகே திருப்பத்தூர் ரோட்டில் உள்ள நாவினிப்பட்டியை சேர்ந்தவர் சக்கரைமுகமது (வயது 65). இவர் மோட்டார் சைக்கிளில் நாவினிப்பட்டியில் கால்வாய் பாலம் அருகே சென்றார். அப்போது திருப்பத்தூரிலிருந்து மதுரை நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சக்கரைமுகமது அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து மேலூர் துணை சூப்பிரண்டு ஆர்லியஸ்ரெபோனி, இன்ஸ்ெபக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பொதுமக்கள் கூறும் போது, இந்த பகுதியில் அதிக வேகமாக பஸ்கள் செல்வதால் விபத்து நேரிடுகிறது. எனவே வேகத்தடை அமைக்க வேண்டும் என்றனர். இதையடுத்து போலீசாரின் சமரச பேச்சுவார்த்தைைய தொடர்ந்து மறியலை கைவிட்டனர்.