வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவர் சாவு


வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவர் சாவு
x
தினத்தந்தி 29 Jun 2023 12:15 AM IST (Updated: 29 Jun 2023 1:54 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவர் இறந்து போனார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 3-வது தெருவை சேர்ந்த கருப்பையா மகன் சுடலை (வயது 70). இவர், ரெயில்வேயில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர், 4-வது தெருவில் மாரிக்கண்ணன் என்பவர் புதிதாக கட்டி வரும் வீட்டை பார்க்க சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டின் மாடியில் இருந்து கால் தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து, மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த், சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகண்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story