இரணியல் அருகே தீவிபத்தில் காயமடைந்த முதியவர் சாவு


இரணியல் அருகே தீவிபத்தில் காயமடைந்த முதியவர் சாவு
x

இரணியல் அருகே தீவிபத்தில் காயமடைந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

இரணியல் அருகே தீவிபத்தில் காயமடைந்த முதியவர் பரிதாபமாக இறந்தார்.

இரணியல் அருகே உள்ள காரங்காடு தாணிவிளையை சேர்ந்தவர் பால்பாண்டியன் (வயது 85). இவருக்கு புஷ்பம் என்ற மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். பால்பாண்டியன் மகன் ஜாண்சகாயம் வீட்டில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று காலையில் பால்பாண்டியன் காபி போடுவதற்காக அடுப்பை பற்ற வைத்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அவரது லுங்கியில் தீப்பற்றியது. தீ உடல் முழுவதும் பற்றி எரிந்ததால் அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பின்னர், படுகாயமடைந்த பால்பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பால்பாண்டியன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் தேவசகாயம் இரணியல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story