விழுப்புரத்தில் பஸ் மோதி முதியவர் பலி
விழுப்புரத்தில் பஸ் மோதி முதியவர் பலியானாா்.
விழுப்புரம்
விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதையை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 68). இவர் நேற்று காலையில் விழுப்புரம் நான்கு முனை சாலையை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கிச்சென்ற அரசு விரைவு பஸ் ஒன்று அண்ணாதுரை மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த விழுப்புரம் மேற்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அண்ணாதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் அரசு பஸ் டிரைவர் மேல்மருவத்தூரைச் சேர்ந்த ஆனந்தகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story