அரசு பஸ் மோதி முதியவர் பலி
தக்கலை அருகே அரசு பஸ் மோதி முதியவர் பலியானார்.
தக்கலை:
தக்கலை அருகே அரசு பஸ் மோதி முதியவர் பலியானார்.
தக்கலை அருகே உள்ள பரைக்கோடு, ஆலுவிளையை சேர்ந்தவர் பொன்னு முத்து (வயது 79), கூலித்தொழிலாளி. இவருக்கு பேபி என்ற மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். பொன்னுமுத்து தினமும் காலையில் டீ குடிப்பதற்கு கடைக்கு செல்வது வழக்கம். அதுபோல் நேற்று அதிகாலை பரைக்கோடு ஆற்று பாலம் அருகில் இருந்து தேசிய நெடுஞ்சாலையின் மறுபுறம் உள்ள டீ கடைக்கு செல்ல சாலையை கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக களியக்காவிளையில் இருந்து தக்கலை நோக்கி வந்த அரசு பஸ் பொன்னுமுத்து மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தக்கலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்போில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பொன்னுமுத்துவின் உடலை கைப்பற்றி தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பொன்னுமுத்துவின் மகன் சுபாஷ் கொடுத்த புகாரின் பேரில் காட்டுகடையை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ஜஸ்டின் ஷாஜி மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
------------