தனியார் கண் மருத்துவமனை முன்பு முதியவர் தர்ணா போராட்டம்


தனியார் கண் மருத்துவமனை முன்பு முதியவர் தர்ணா போராட்டம்
x

தனியார் கண் மருத்துவமனை முன்பு முதியவர் தர்ணா போராட்டம் நடந்தது.

கரூர்

கரூர் வஞ்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜி (வயது 71). இவர் கரூர்-கோவை சாலையில் உள்ள சோமசுந்தரம் கண் மருத்துவமனை முன்பு வாசகங்கள் எழுதிய அட்டையை தொங்கவிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முதியவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கண் மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்ததாகவும், ஒரு மாதம் கழித்து கண்ணில் இருந்து நீர்வடிதல் ஏற்பட்டதாகவும், தற்போதும் சரியாகவில்லை என்றும் எந்த பலனும் இல்லாததால் கண் மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.


Next Story