கணவர் இறந்த துக்கத்தில் விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை
கணவர் இறந்த துக்கத்தில் விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கூத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி வைரம் (வயது 67). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சின்னையன் இறந்ததால் வைரம் தனது மகன் பெரியசாமி வீட்டில் வசித்து வந்தார். கணவர் இறந்த துக்கத்தில் இருந்த வைரம் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் காணப்பட்டார். இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மூதாட்டி வைரம் விஷம் குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வைரம் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மருவத்தூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story