மஞ்சள் நீராட்டு விழா பந்தலில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி


மஞ்சள் நீராட்டு விழா பந்தலில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி
x

ஆம்பூர் அருகே பேத்தியின் மஞ்சள் நீராட்டு விழா பந்தலில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

திருப்பத்தூர்

ஆம்பூர்

ஆம்பூர் அருகே பேத்தியின் மஞ்சள் நீராட்டு விழா பந்தலில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

மஞ்சள் நீராட்டு விழா

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சின்னபள்ளி குப்பம் இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி ஜானகி (வயது 61). இவர்களது மகன் இதயகுமார்.

இவரது மகளுக்கு நேற்று இரவு வீட்டில் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இதையொட்டி பந்தல் மற்றும் அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று காலை 6 மணி அளவில் ஜானகி வீட்டில் தூய்மை பணியில் ஈடுபட்டார்.

மின்சாரம் தாக்கி பலி

அப்போது அங்கு போடப்பட்டிருந்த பந்தலில் இருந்த ஒரு பைப்பை பிடித்த போது மின்சாரம் ஜானகி மீது தாக்கியது. இதனால் அவர் அலறி துடித்தார்.

இதை கண்ட உறவினரான கடலூர் அருகே குள்ளஞ்சாவடி இலங்கை தமிழர்கள் முகாமை சேர்ந்த ஸ்ரீதர் (26) என்பவர் ஜானகியை காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது.

இதில் தூக்கி வீசப்பட்ட ஜானகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் ஸ்ரீதர் படுகாயம் அடைந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் ஸ்ரீதரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜானகியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேத்தியின் மஞ்சள் நீராட்டு விழா பந்தலில் மின்சாரம் பாய்ந்து பாட்டி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடம் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story