அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட மூதாட்டி சாவு
அம்மூர் அருகே அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட மூதாட்டி பலியானார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அருகே உள்ள வேலம் பகுதியை சேர்ந்தவர் கெங்காபாய் (வயது 65). இவர் கடந்த 19-ந் தேதி வீட்டில் தான் வழக்கமாக சாப்பிடும் மாத்திரையை விட அதிகமான மாத்திரையை சாப்பிட்டுள்ளார்.
இதனால் மயங்கி விழுந்த அவரை சிகிச்சைக்காக அவரது குடும்பத்தினர் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story