ஈரோடு மாவட்டத்தில் 11 லட்சம் வாக்காளர் அடையாள அட்டைகளுடன் ஆதார் எண் இணைப்பு


ஈரோடு மாவட்டத்தில் 11 லட்சம் வாக்காளர் அடையாள அட்டைகளுடன் ஆதார் எண் இணைப்பு
x

ஈரோடு மாவட்டத்தில் 11 லட்சம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 11 லட்சம் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு உள்ளது.

முகாம்

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர், பெருந்துறை ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் 19 லட்சத்து 45 ஆயிரத்து 856 வாக்காளர்கள் உள்ளனர்.

வருகிற ஜனவரி மாதம் 5-ந் தேதி தேசிய வாக்காளர் தினத்தையொட்டி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்து உள்ளது. இதையொட்டி புதிய வாக்காளர்களின் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் போன்ற பணிகள் ஆன்லைன் மூலமாகவும், முகாம் மூலமாகவும் நடைபெற்று வருகிறது.

ஆதார் எண் இணைப்பு

இந்த முகாமில் 43 ஆயிரத்து 958 விண்ணப்பங்கள் நேரிலும், 13 ஆயிரத்து 679 விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமாகவும் என மொத்தம் 57 ஆயிரத்து 637 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11 லட்சத்து 72 ஆயிரத்து 779 வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Next Story