எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்: அ.தி.மு.க.வை முடக்க கனவு கண்டவர்களுக்கு சரியான பாடம்- முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு

எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்: அ.தி.மு.க.வை முடக்க கனவு கண்டவர்களுக்கு சரியான பாடம்- முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு
x

எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்து இருப்பது, அ.தி.மு.க.வை முடக்க நினைத்தவர்களுக்கு சரியான பாடம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

மதுரை

திருமங்கலம்,

எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்து இருப்பது, அ.தி.மு.க.வை முடக்க நினைத்தவர்களுக்கு சரியான பாடம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

அங்கீகாரம்

திருமங்கலம் தொகுதியில் உள்ள நடுவக்கோட்டை, ஆலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புதிய அங்கன்வாடி திறப்பு விழா, புதிய கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்து பேசும்போது கூறியதாவது:-

ஜெயலலிதாவுக்கு பிறகு இந்த இயக்கத்தையும், இயக்க தொண்டர்களையும் காப்பாற்ற கலங்கரை விளக்கமாய் எடப்பாடி பழனிசாமி நமக்கு கிடைத்துள்ளார். இன்றைக்கு இந்திய தேர்தல் ஆணையம், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ளது. இந்த இயக்கம்தான் ஜனநாயகத்தின் முகவரியாக உள்ளது.

பொய்யாகி விட்டது

இந்த இயக்கம் இன்னும் 100 ஆண்டுகள் மக்கள் சேவையாற்ற வேண்டும் என்ற ஜெயலலிதாவின் வாக்கை கொண்டு மக்கள் பணியாற்றி வருபவர் எடப்பாடி பழனிசாமி. இந்த இயக்கத்தை எப்படியாவது முடக்கிட வேண்டும் என்று எதிரிகளும், துரோகிகளும் இயக்கத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க வேண்டும் என நினைத்தனர். அவர்கள் கண்ட கனவு பொய்யாகி விட்டது. அவர்களுக்கு இது சரியான பாடம்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் தமிழழகன், ஒன்றிய குழு தலைவர் லதா ஜெகன், பொதுக்குழு உறுப்பினர் சுமதி சாமிநாதன், ஆலம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன், மாணவர் அணி இணைச்செயலாளர் சிவசக்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை திருமங்கலம் நகர அ.தி.மு.க. சார்பில் நகரச் செயலாளர் விஜயன் தலைமையில் இனிப்புகள் வழங்கப்பட்டது.

Related Tags :
Next Story