கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல்


கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல்
x

கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது.

கரூர்

ஊரக உள்ளாட்சி தேர்தல்

கரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், அம்மாபட்டி ஊராட்சி வார்டு எண்.9, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், மொடக்கூர் (மேற்கு) ஊராட்சி வார்டு எண்.5, க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், புன்னம் ஊராட்சி வார்டு எண்.3, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், வீரியபாளையம் ஊராட்சி வார்டு எண்.7, குளித்தலை ஊராட்சி ஒன்றியம், குமாரமங்கலம் ஊராட்சி வார்டு எண்.9, தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், கருப்பம்பாளையம் ஊராட்சி, வார்டு எண்.9, தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், பள்ளப்பாளையம் ஊராட்சி வார்டு எண்.3 ஆகிய 7 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

போட்டியின்றி தேர்வு

இதில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், அம்மாபட்டி ஊராட்சி வார்டு எண்.9, அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், மொடக்கூர் (மேற்கு) ஊராட்சி வார்டு எண்.5, குளித்தலை ஊராட்சி ஒன்றியம், குமாரமங்கலம் ஊராட்சி வார்டு எண்.9, தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், கருப்பம்பாளையம் ஊராட்சி, வார்டு எண்.9, தாந்தோணி ஊராட்சி ஒன்றியம், பள்ளப்பாளையம் ஊராட்சி வார்டு எண்.3 ஆகிய 5 பதவியிடங்களுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், புன்னம் ஊராட்சி வார்டு எண்.3-க்கு 3 வேட்பாளர்களும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், வீரியபாளையம் ஊராட்சி வார்டு எண்.7-க்கு 2 வேட்பாளர்களும் போட்டியிட்டனர். இதனால் அந்த பகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், புன்னம் ஊராட்சி வார்டு எண்.3-ல் 436 வாக்காளர்களும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், வீரியபாளையம் ஊராட்சி வார்டு எண்.7-ல் 252 வாக்காளர்களும் வாக்களிக்க இருந்தனர்.

வாக்குப்பதிவு

இதனையடுத்து க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், புன்னம் ஊராட்சி வார்டு எண்.3-க்கு ஆலம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், வீரியபாளையம் ஊராட்சி வார்டு எண்.7-க்கு வெள்ளையக்கவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்களிக்க தயார் நிலையில் இருந்தன. மேலும் வாக்குச்சாவடி மையத்தினை அறியும் வகையில் 100, 200 மீட்டர்களுக்கு முன்னதாக பெயிண்டு மூலம் கோடு போடப்பட்டிருந்தது.ஏற்கனவே, அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவிற்கு தேவையான மை, அச்சு உள்ளிட்ட பொருட்கள் நேற்று முன்தினமே அனுப்பப்பட்டன. வாக்குச்சாவடி மையங்களில் சரியாக நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

முக கவசம்

கொரோனா அச்சுறுத்தலால் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த வாக்காளருக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி வழங்கப்பட்டது. பின்னர் வாக்காளரின் உடல் வெப்பநிலை தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் வாக்காளருக்கு பாலித்தின் கையுறை வழங்கப்பட்டது. மேலும் வாக்காளர்கள் முக கவசம் அணிந்து வந்திருந்தனர். வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஆவணங்களில் ஒன்றை பயன்படுத்தி வாக்களித்தனர். வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.

வாக்குப்பதிவு நிலவரம்

இதில் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், புன்னம் ஊராட்சி, வார்டு எண் 3-க்கு ஆலம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 317 பேர் வாக்களித்து உள்ளனர். இதில் ஆண்கள் 146 பேரும், பெண்கள் 171 பேரும் வாக்களித்து உள்ளனர். இது 72.7 சதவீதம் ஆகும். கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், வீரியபாளையம் ஊராட்சி, வார்டு எண் 7-க்கு வெள்ளையக்கவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவில் 186 பேர் வாக்களித்து உள்ளனர். இதில் ஆண்கள் 82 பேரும், பெண்கள் 104 பேரும் வாக்களித்து உள்ளனர்.

வாக்குப்பெட்டிகளுக்கு சீல்

பின்னர் வாக்குப்பதிவு முடிந்தவுடன் அந்தந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு செய்த வாக்குப்பெட்டிகள் வாக்குச்சாவடி அலுவலர்கள், வேட்பாளர்களின் வாக்குச்சாவடி முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. பின்னர் வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையமான அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டு, அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது. அந்த அறைகளுக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த அறைகள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணிக்கை

வருகிற 12-ந்தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுபவர்களும், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டவர்களும் 15-ந்தேதி பதவி ஏற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story