உபவடி நில பகுதிகளின் நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல்


உபவடி நில பகுதிகளின் நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல்
x

உபவடி நில பகுதிகளின் நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 73 ஏரிகள் 33 அணைக்கட்டுகள் மற்றும் 2 நீர்த்தேக்கங்கள் உள்ளன. மேலும் வெள்ளாறு வடிநிலம் மற்றும் காவிரி வடிநிலம் என 2 பெரும் வடிநிலங்கள் உள்ளன. இவற்றில் தற்போது வெள்ளாறு வடிநிலத்தின் கீழ் உள்ள சின்னாறு உபவடி நிலம், சுவேதா நதி உபவடி நிலம், மேல் வெள்ளாறு உபவடி நிலம் மற்றும் கீழ் வெள்ளாறு உபவடி நிலப் பகுதிகளில் நீரினை பயன்படுத்தும் 31 சங்கங்களின் தலைவர்கள் மற்றும் ஆட்சி மன்ற தொகுதி உறுப்பினர்கள் தேர்தல் அறிவிப்பை கடந்த 13-ந் தேதி கலெக்டரின் ஒப்புதலோடு பெரம்பலூர் மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன்படி சின்னாறு, சுவேதாநதி, மேல் வெள்ளாறு மற்றும் கீழ் வெள்ளாறு உபவடி நிலப்பகுதிகளில் நீரினைப்பயன்படுத்தும் 31 சங்கங்களின் தலைவர்கள் மற்றும் ஆட்சி மன்ற தொகுதி உறுப்பினர்கள் தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த சங்கங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் வேட்பு மனுக்களை முறையாக பரிசீலனை செய்து நடப்பிலுள்ள விதிகளின் படி போட்டியின்றி ஒரு மனதாக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பெயர் பட்டியல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. இந்த சங்கங்களில் வெற்றி பெற்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களை பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, நீர் வளத்துறை உதவி செயற்பொறியாளர் வேல்முருகன் முன்னிலையில் வழங்கினார். இதில் நீர்வளத்துறை உதவிப்பொறியாளர்கள் ஜெயபிரகாஷ், வினோத்குமார், தங்கையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story