நீரை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான தேர்தல்


நீரை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான தேர்தல்
x

நீர்வள நிலவளத்திட்டத்தின் கீழ் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான தேர்தல் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.

திருநெல்வேலி

நீர்வள நிலவளத்திட்டத்தின் கீழ் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான தேர்தல் நடத்தப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது;-

சங்கங்களுக்கான தேர்தல்

நெல்லை மாவட்டத்தில் நீர்வள நிலவளத்திட்டத்தின் கீழ் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான 2-வது தேர்தல் மற்றும் தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனப்படுத்துதல் திட்டத்தின் கீழ் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கான முதல் மற்றும் 2-வது தேர்தல் அடுத்த மாதம் (டிசம்பர்) 11-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் 12 சங்க தலைவர்கள் பதவியிடங்களுக்கும், அதனுள் அமைந்த 50 ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்கள் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

தேர்தல் அட்டவணை

நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர்கள் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களிடம் இருந்து வருகிற 29-ந்தேதி முதல் 30-ந்தேதி மாலை 4 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது.

வேட்பு மனுக்களை கூர்ந்தாய்வு செய்தல் மற்றும் ஏற்கத்தக்க வேட்பு மனுக்களின் பட்டியல் 1.12.2022 அன்று வெளியிடப்படுகிறது. வேட்பு மனுக்களை 1.12.2022 அன்று மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை வாபஸ் பெறலாம். போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இறுதியாக்குதல் மற்றும் தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு செய்தல் 1.12.2022 அன்று மாலை 4 மணி முதல் நடக்கிறது.

தேர்தல் முடிவு

நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர்கள் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு 11.12.2022 அன்று காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.

வாக்குகள் எண்ணும் பணி மற்றும் தேர்தல் முடிவுகள் 11.12.2022 அன்று மாலை முதல் வெளியிடப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story