குமரியில் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கு தேர்தல்


குமரியில் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கு தேர்தல்
x

குமரியில் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களுக்கு தேர்தல் இன்று நடக்கிறது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

கோதையாறு வடிநில கோட்டத்தில் அமைந்துள்ள 46 நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்கள் பதவிகளை நிரப்புவதற்கான தேர்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. பத்மநாபபுரம் சப்-கலெக்டர் மற்றும் நாகர்கோவில் கோட்டாட்சியர் ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர்களாக செயல்படுகிறார்கள்.

தலைவர் பதவிக்கு 56 வேட்புமனுக்களும், உறுப்பினர் பதவிக்கு 114 வேட்புமனுக்களும் பெறப்பட்டன. வேட்புமனுக்களை கூர்ந்தாய்வு செய்தல் மற்றும் செல்திறன் உள்ள வேட்பு மனுக்களின் பட்டியல் 15-ந் தேதி வெளியிடப்பட்டது. அப்போது தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த 3 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 2 பேர் வேட்புமனுக்களை வாபஸ்பெற்றனர். அந்த வகையில் மீதமுள்ள 51 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இதே போல உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுக்களில் 5 வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 2 வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. மீதமுள்ள 107 வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்த நிலையில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை ஒப்புதல் செய்யப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும். பின்னர் மாலை 4 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதையொட்டி வாக்குச்சாவடிகள் தயார் செய்யும் பணி நடந்தது. அந்தந்த சங்கங்கள் செயல்பட்டு வரும் இடங்களுக்கு அருகே உள்ள பள்ளிகளில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.


Next Story