5 சட்டமன்ற தொகுதிகளிலும் 12.37 லட்சம் வாக்காளர்கள்


5 சட்டமன்ற தொகுதிகளிலும் 12.37 லட்சம் வாக்காளர்கள்
x
தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 12.37 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்று கலெக்டர் சாந்தி தெரிவித்தார்

தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மொத்தம் 12.37 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்று கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.

வரைவு வாக்காளர் பட்டியல்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான சாந்தி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

அப்போது கலெக்டர் பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 5 தொகுதிகளிலும் ஆண் வாக்காளர்கள் 6,25,692 பேரும், பெண் வாக்காளர்கள் 6,11,258 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 176 பேரும் என மொத்தம் 12,37,126 வாக்காளர்கள் உள்ளனர். பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் ஆண்கள் 11,8,950 பேரும், பெண்கள் 11,6,541 பேரும், மூன்றாம் பாலினம் 17 பேரும் என மொத்தம் 23,5,508 வாக்காளர்கள் உள்ளனர்,

தர்மபுரி -அரூர்

பென்னாகரம் தொகுதியில் ஆண்கள் 12,5465 பேரும், பெண்கள் 11,7213 பேரும், மூன்றாம் பாலினம் 10 பேரும் என மொத்தம் 24,2,688 வாக்காளர்கள் உள்ளனர். தர்மபுரி தொகுதியில் ஆண்கள் 13,0747 பேரும், பெண்கள் 12,8,251 பேரும், மூன்றாம் பாலினம் 112 பேரும் என மொத்த 25,9,110 வாக்காளர்கள் உள்ளனர். பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் ஆண்கள் 12,8362 பேரும், பெண்கள் 12,7,603 பேரும், மூன்றாம் பாலினம் 13 பேரும் என மொத்த 25,5,978 வாக்காளர்கள் உள்ளனர். அரூர் (தனி) தொகுதியில் ஆண்கள் 12,2168 பேரும், பெண்கள் 12,1,650 பேரும், மூன்றாம் பாலினம் 24 பேரும் என மொத்தம் 24,3,842 வாக்காளர்கள் உள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 1,485 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதற்கான வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 878 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 5-1-2022 முதல் 20-10-2022 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கக் கோரி மொத்தம் 7,573 படிவங்கள் பெறப்பட்டன. அதில் 6,398 படிவங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர்கள் (பொறுப்பு) ஜெயக்குமார், விஸ்வநாதன், நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார், தேர்தல் தனி தாசில்தார் சவுகத் அலி, தர்மபுரி தாசில்தார் ராஜராஜன் மற்றும் அரசு அலுவலர்கள், தி.மு.க., அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story