மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கும்பகோணத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது.
தஞ்சாவூர்
கும்பகோணம், மே.10-
கும்பகோணம் கோட்ட செயற் பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தஞ்சாவூர் மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நடைபெற உள்ளது.கூட்டத்தில் கும்பகோணம் நகரம், புறநகர், பாபநாசம் நகர், புறநகர் கபிஸ்தலம், அய்யம்பேட்டை, திருக்கருகாவூர், கணபதி அக்ரஹாரம் பட்டீஸ்வரம், சுவாமிமலை, திருப்புறம்பியம் பிரிவு அலுவலக பகுதிகளை சேர்ந்த சேர்ந்த மின் நுகர்வோர் கலந்து கொண்டு மின் வினியோகம் தொடர்பான தங்களது குறைகளை நேரில் தெரிவித்து பயனடையலாம்.இந்த தகவலை மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story