மின் மோட்டார் திருட்டு


மின் மோட்டார் திருட்டு
x

சின்னசேரி ஊராட்சி மன்ற தலைவரின் மின் மோட்டார் திருட்டு போனது.

திருப்பத்தூர்

பள்ளிகொண்டாவை அடுத்த சின்னசேரி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் மணி. இவர் ஆலை வைத்து வெல்லம் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு தொழிலாளர்கள் வேலையை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தனர். நேற்று அதிகாலை 3 மணிக்கு தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர். அப்போது அங்கு இருந்த மின்மோட்டார் மற்றும் ஆலை உதிரிப்பாகங்கள் திருட்டு போனது தெரியவந்தது.

இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்துக்கு சென்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர்.


Next Story