மின்மோட்டார் வயர் திருட்டு


மின்மோட்டார் வயர் திருட்டு
x

மூங்கில்துறைப்பட்டு அருகே மின்மோட்டார் வயர் திருடு போனது.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு:

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள ரங்கப்பனூர் ஏரியில் ஊராட்சி சார்பில் குடிநீர் கிணறு வெட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கிணற்றில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றுவதற்காக 2 மின் மோட்டார்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் கிணற்று நீரை வெளியேற்றுவதற்காக ஊராட்சி நிர்வாகத்தினர் சென்றனர். அப்போது அங்கு 2 மின்மோட்டார்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு இருந்த ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள வயரை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊராட்சி நிர்வாகத்தினர், இது குறித்து வடபொன்பரப்பி போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story