பலத்த மழையால் மின்கம்பம், மரம் சாய்ந்தது3 மணி நேரம் மின்தடை
ஏலகிரி மலை பகுதியில் பலத்த மழையால் மின்கம்பம், மரம் சாய்ந்து3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
ஜோலார்பேட்டை
ஏலகிரி மலை பகுதியில் பலத்த மழையால் மின்கம்பம், மரம் சாய்ந்து 3 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலையானது ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. ஏலகிரி மலை 14 கிராமங்களை உள்ளடக்கிய தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. இங்கு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
நேற்று முன் தினம் இரவு ஜோலார்பேட்டை மற்றும் ஏலகிரி மலை பகுதியில் இரவு முழுவதும் விடிய விடிய மழை பெய்தது. இதனால் சாலைகளிலும் மற்றும் தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
நிலாவூர் செல்லும் முக்கிய சாலையில் அரசு விடுதி அருகில் ராட்சத, நாவல் மரம் மின்கம்பங்கள் மீது முறிந்து விழுந்தது. இதனால் 2 மின்கம்பங்கள் உடைந்து சாலையில் விழுந்தன.
தகவல் அறிந்த ஏலகிரி மலை மின்ஊழியர் பரந்தாமன் உள்ளிட்ட பணியாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று மின்சாரத்தை துண்டித்து, முறிந்து விழுந்த மரம், மின்கம்பங்களை அகற்றி மின்வினியோகத்தை சீராக்கும் பணியில் ஈடுபட்டனர். 3 மணி நேரம் கழித்து மின்வினியோகம் சீரானது.