பாலமேடு அருகே சூறைக்காற்றுக்கு மின்கம்பங்கள் சாய்ந்தன: மின்சாரம் தாக்கி கன்றுக்குட்டி பலி
பாலமேடு அருகே சூறைக்காற்றுக்கு மின்கம்பங்கள் சாய்ந்ததில் மின்சாரம் தாக்கி கன்றுக்குட்டி பலியானது
மதுரை
அலங்காநல்லூர்
அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று திடீரென சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இந்நிலையில் பாலமேடு அருகே பொம்மி நாயக்கன்பட்டியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழைக்கு சில வீடுகள், மாட்டு கொட்டகையின் மேற்கூரைகள் பறந்தன. மேலும் 3-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. மின்கம்பம் சாய்ந்ததில் அப்பகுதியில் இருந்த ஒரு கன்றுகுட்டியின் மீது மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து அறிந்த மின் வாரியத்தினர் மின்சாரத்தை உடனடியாக துண்டித்தனர். மழை மற்றும் பலத்த காற்றால் அப்பகுதியில் இருந்த பப்பாளி தோட்டங்கள் சேதமானது.
Related Tags :
Next Story